விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை


விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை
x

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாகை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது மழை நின்று கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. ஆனால் இரவில் கடும் பனி பொழிவு நிலவி வந்தது.

இந்த நிலையில் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி, திருமருகல், அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்றது. நேற்று காலையும் மழை பெய்தது. இந்த மழையால் சம்பா இளம் நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story