2-ம் நாள் தெப்பல் உற்சவம்
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2-ம் நாள் தெப்பல் உற்சவம் நடந்தது.
ராணிப்பேட்டை
காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்றுமுன்தினம் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தரிசனம் செய்தனர். மாலையில் தெப்பல் உற்சவம் நடந்தது. 2-வது நாளான நேற்று காலை மூலவர் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சரவணப் பொய்கை தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேலூர் சலவன்பேட்டை பாரத் துர்கா தேவி நாட்டியப்பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story