வடபழனி சக்தி கொலு விழாவின் 5-ம் நாள் - கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்


வடபழனி சக்தி கொலு விழாவின் 5-ம் நாள் - கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்
x

சக்தி கொலு விழாவின் 5-ம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவையொட்டி, சக்தி கொலு என்ற பெயரில், வடபழனி கோவிலில் பிரம்மாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் மாலையும் 108 பேர் கொண்ட குழுவால், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் சக்தி கொலு விழாவின் 5-ம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜை மற்றும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் கொலு பாட்டு அரங்கேறியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கொலு விழாவை கண்டு களித்தனர்.


Next Story