நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

மன்னார்குடியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவும் இன்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியை கலெக்டர்தலைமையில் அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், தாசில்தார் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story