தயாளு அம்மாள் பிறந்தநாள் விழா: கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின்- மு.க.அழகிரி சந்திப்பு


தயாளு அம்மாள் பிறந்தநாள் விழா: கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின்- மு.க.அழகிரி சந்திப்பு
x

தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டிற்கு வந்தனர்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தயாளு அம்மாள் பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் பேசி கொண்டனர் என்றும் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் எப்போது சண்டையிட்டனர், சமாதானம் ஆவதற்கு? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 More update

Next Story