ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x

ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றில் வாலிபர் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வாலிபர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? என அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததில், ஆற்றில் மூழ்கி பலியான வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையான்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்த மதலைமுத்து மகன் பெனிட்டோ போஸ்கோ (வயது 26) என்பதும், தொழிலாளியான இவர் ஜேடர்பாளையத்துக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தபோது, காவிரி ஆற்றில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story