வத்திராயிருப்பு பெரிய கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்


வத்திராயிருப்பு பெரிய கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்
x

வத்திராயிருப்பு பெரிய கண்மாயில் செத்து மிதக்கும் மீன்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர்


வத்திராயிருப்பு பெரிய கண்மாயில் மீன் பாசி ஏலம் விட்டது தொடர்பாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் மீன்வளத்துறை மீன் பாசி ஏலத்தை ரத்து செய்து விட்டது. இதற்கிடையில் அப்பகுதி விவசாயிகள் கண்மாயில் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டதில் தற்போது அவை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மீன்களை பிடிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் இதுபற்றி முடிவு எடுக்கப்படாத நிலையில் கண்மாயில் விடப்பட்ட மீன்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி கூறியதாவது:- வத்திராயிருப்பு பெரிய கண்மாய் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீன்வளத்துறை மீன்பாசி ஏலம் விட்டதால் ஏலம் எடுத்தவர்கள் விவசாயிகளுக்கு மறு ஏலம் விட்ட நிலையில் விவசாயிகளும் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விட்டனர். தற்போது மீன்கள் வளர்ந்து விட்ட நிலையில் அதை பிடித்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து முடிவு ஏதும் எடுக்கப்படாத நிலையில் தற்போது கண்மாயில் விடப்பட்ட மீன்கள் தண்ணீர் குறைந்ததால் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் யாருக்கும் பலன் இல்லாமல் போய்விட்டது. எனவே இனி வருங்காலத்தில் இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story