காயங்களுடன் தொழிலாளிபிணம்


காயங்களுடன் தொழிலாளிபிணம்
x

தாரமங்கலம் அருகே காயங்களுடன் கிடந்த தொழிலாளி உடலை போலீசுக்கு தெரியாமல் உறவினர் எரித்ததால் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே செவந்தானூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 45). கல் உடைக்கும் தொழிலாளியான இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று மாலையில் தலையில் ரத்த காயங்களுடன் வடிவேலு இறந்து கிடந்தார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்குள்ள மயானத்தில் எரித்து விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த ஒமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வடிவேலு மகன்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.


Next Story