தடுப்பணையில் பெண் பிணம்


தடுப்பணையில் பெண் பிணம்
x

வேடசந்தூர் அருகே தடுப்பணையில் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி காளியம்மாள் (வயது 45). இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். இந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள தடுப்பணையில் பெண் ஒருவர் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். அந்த பெண், காணாமல் போன மணிவேல் மனைவி காளியம்மாள் என்பது தெரியவந்தது. அவர் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story