கண்மாய்க்குள் இறந்து கிடந்த 4 மாடுகள்
கண்மாய்க்குள் 4 மாடுகள் இறந்து கிடந்தன.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே வையாபுரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பூலாப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று சிங்கம்புணரி சேவுபெருமாள் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைப்பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்மாய் பாதையில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்ட மின்கம்பத்தின் மின் வயர்கள் அறுந்து கண்மாய்க்குள் கிடந்ததாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி மாடுகள் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் நிர்வாகிகள் மாடுகளை அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story