சிவரஞ்சி தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


சிவரஞ்சி தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x

சிவரஞ்சி தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

சிவரஞ்சி தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் ஜோதி பூ மார்க்கெட்டின் பின்புறத்தில் சிவரஞ்சி தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் உள்ள சிவன் சன்னதியில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த குளத்தில் மீன்கள் பல வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை இக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் குளத்தின் அருகில் துர்நாற்றம் வீசியது. இவ்வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தை நேரில் வந்து ஆய்வு செய்து மீன்கள் எப்படி இறந்தன என்றும், செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது பரபரப்கை ஏற்படுத்தியது.

1 More update

Next Story