ஏரியில் செத்து மிதந்த மீன்கள்


ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
x

ஜோலார்பேட்டை அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மையப்பன் பெரிய ஏரி ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை அம்மையப்பன் பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. சுமார் 200 கிலோ எடையுள்ள மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் நிர்மலா சஞ்சய் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது ஊராட்சிமன்ற தலைவர் கூறுகையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் ஏரியில் இறந்த மிதந்தது. இதனால் ஏரியின் தண்ணீரை சேகரித்து அதனை பரிசோதனைக்காக வேலூர் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மர்ம ஆசாமிகள் ஏதாவது நாச வேலையில் ஈடுபட்டார்களா என போலிசார் விசாரணையில் தெரிய வரும் என்றார்.


Next Story