ஏரியில் செத்து மிதந்த மீன்கள்


ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 11:41 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

கடலூர்

பெண்ணாடம்:

பெண்ணாடம் அருகே அரியராவி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்வளர்த்து விற்பனை செய்ய அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 33) என்பவர் குத்தகைக்கு எடுத்தார். தொடர்ந்து அவர் ஏரியில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஏரியில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மீன்கள் செத்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீன்கள் செத்ததற்கு காரணம் என்ன? என்பதை பற்றி அறிய ஏரி நீர் மற்றும் செத்த மீன்களை சேகரித்து சோதனைக்காக புதுச்சேரிக்கு அனுப்ப்பட்டுள்ளது.

1 More update

Next Story