பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும்


பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும்
x

மரம் விழுந்து ஒருவர் பலியானதை தொடர்ந்து பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோட்டில் பட்டுபோன மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு உள்ளது.

இந்த கூட்ரோடில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழமையான மரம் வேரோடு சாய்ந்ததால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதே பகுதியில் சாலையோரம் பட்டு போன வேப்பமரம், புளியமரம் உள்ளன. வேகமாக காற்று அடித்தால் இவற்றின் கிளைகள் ஒடிந்து அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக இந்த சாலையில் உள்ள பட்டு போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story