காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் காதுகேளாத உள்பட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பதாகைகளை கையில் ஏந்தி அமர்ந்திருந்தனர். சைகை மொழியிலேயே நிர்வாகிகள் பேசினர். மேலும் சத்தமிடாமல் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story