காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபவமிக்க செய்கைமொழி ஆசிரியரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பதாகைகளை கையில் ஏந்தி அமர்ந்திருந்தனர். சைகை மொழியிலேயே நிர்வாகிகள் பேசினர்.


Next Story