"டயர்டா... எனக்கா...?...நெவர்..உலகின் மிக வயதான டாக்டர் உற்சாகம்


டயர்டா... எனக்கா...?...நெவர்..உலகின் மிக வயதான டாக்டர் உற்சாகம்
x
தினத்தந்தி 15 Oct 2022 6:22 PM GMT (Updated: 15 Oct 2022 11:21 PM GMT)

கின்னஸ் உலக சாதனை புத்தகம் மருத்துவர் ஹோவர்ட் டக்கரை உலகிலேயே மிகவும் வயதான மருத்துவராக அங்கீகரித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் க்ளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த 100 வயதான ஹோவர்ட் டக்கர், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரந்தோறும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சேவை செய்து வரும் ஹோவர்ட், கொரோனா பரவல் போது கூட ஜூம் வழியாக தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.

"ஓய்வு என்பது நீண்ட ஆயுளுக்கு எதிரி" என்று தெரிவிக்கும் ஹோவர்ட், தற்போதைக்கு மருத்துவத்தில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமே இல்லை என்று உற்சாகமாக தெரிவித்தார்.


Next Story