கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் சாவு
கொண்டலாம்பட்டி அருகேவிபத்தில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார்.
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கல்பாரப்பட்டி கொம்பாடி பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த மாதம் 25-ந்தேதி பூலாவரியில் உள்ள தாபா ஓட்டலுக்கு வந்துவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சூளைமேட்டை கடக்கும் போது அந்த வழியாக சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த சேகர் (47) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபுவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் பிரபு படுகாயம் அடைந்தார். சேகர் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து பிரபுவை உறவினர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.