பாலக்கோடு அருகேபாம்பு கடித்து மூதாட்டி சாவு


பாலக்கோடு அருகேபாம்பு கடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூரை சேர்ந்தவர் கரகூரா (வயது 65). சம்பவத்தன்று மூதாட்டி கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவரது கையில் பாம்பு கடித்ததால் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து குடும்பத்தார் வந்து மூதாட்டியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story