காரிமங்கலம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு


காரிமங்கலம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 15 Aug 2023 1:00 AM IST (Updated: 15 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள நாகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குமார். தையல் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 27). இவர்களுக்கு மனோஜ் (11), புவியரசன் (12) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் பந்தாரஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மனோஜ் அடிபட்டதாக ஆசிரியர்கள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன வெண்ணிலா மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது.

பரிதாபமாக சாவு

இந்தவிபத்தில் வெண்ணிலா சாலையில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனபால் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story