சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி


சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி
x
சேலம்

சேலம்

மோட்டார் சைக்கிள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலியானார்.

சாலையில் நடந்து சென்றவர்

சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). இவர், நேற்று முன்தினம் இரும்பாலை ரோட்டில் காவடி பழனியாண்டவர் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் மீது மோதியது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்திரசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர் நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story