சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்


சங்ககிரி அருகேவேன்-மோட்டார் சைக்கிள் மோதல்;கியாஸ் நிறுவன தொழிலாளி பலிநண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்
x
சேலம்

சங்ககிரி

சங்ககிரி அருகே நண்பரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கியாஸ் நிறுவன சுமை தூக்கும் தொழிலாளி வேன் மோதி பரிதாபமாக இறந்தார்.

கியாஸ் நிறுவன தொழிலாளி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருகாலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 34). இவர் தனியார் கியாஸ் நிறுவன குடோனில் சுமை ஏற்றும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு 8.45 மணியளவில் கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையை முடித்து விட்டு சங்ககிரி பகுதியில் இருந்து எடப்பாடி நோக்கி நண்பருடைய திருமணத்தில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.

வேலம்மா வலசு பஸ் நிறுத்தம் அருகே அவா் ெசன்று ெகாண்டிருந்த போது, தனியார் நூல் மில் வேலை ஆட்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான கேசவனுக்கு செல்வராணி என்ற மனைவியும், சாய்கவுசிக் என்ற மகனும், வினிதா என்ற மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story