சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு


சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில்படுகாயம் அடைந்த பெண் சாவு
x
சேலம்

ஏற்காடு

ஏற்காடு செந்திட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஏற்காடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு செந்திட்டு, அரங்கம், பெலாக்காடு, மாரமங்களம், நார்த்தஞ்சேடு கிராமங்களை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் மோட்டூர் கிராமத்திற்கு சரக்கு வேனில் சென்றனர். வேனை சுப்பிரமணி (வயது40) என்பவர் ஓட்டிச் சென்றார். திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

வாழவந்தி கிரயத்தை தாண்டி ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது திடீரென வேனின் ஆக்ஸல் உடைந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வேனில் சென்ற 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அருநுத்துமலை சிறுமலை பகுதியை சேர்ந்த மம்மலையான் மனைவி வெள்ளாயி (38) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


Related Tags :
Next Story