பாப்பாரப்பட்டி அருகேவிபத்தில் புதுமாப்பிள்ளை சாவு


பாப்பாரப்பட்டி அருகேவிபத்தில் புதுமாப்பிள்ளை சாவு
x
தர்மபுரி

பாப்பாரப்பட்டி

தர்மபுரி மாவட்டம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், நாகதாசம்பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். பின்னர் வேலை தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பாப்பாரப்பட்டிக்கு நண்பரான பழனிசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். பழனிசாமிக்கும் காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கோபாலகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story