கிணற்றில் குதித்து பெண் இறந்தார்
ஆத்தூர்
ஆத்தூர் கடைவீதி பழைய பேட்டை பாரதியார் தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது 54), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (44). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சாந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் சாந்தி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து சாந்தி உடலை மீட்டனர். அந்த உடலை ஆத்தூர் டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்தனர். சாந்தியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் கிணற்றில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.