தொப்பூர் கணவாயில்கன்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் சாவு
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர்-கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரிகள் மோதல்
சென்னையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி கோவைக்கு சென்றது. இந்த லாரியை கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 29) ஒட்டி வந்தார். தொப்பூர் கணவாய், கட்டமேடு பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, எதிர்திசையில் சென்ற கியாஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, கன்டெய்னர் லாரி டிரைவர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று உயிரிழந்த டிரைவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கன்டெய்னர் கியாஸ் டேங்கர் லாரி ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.