அரூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
அரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (39). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அரூருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினர். அரூர் சின்னாங்குப்பம் பாலம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், குணசேகரன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கோவிந்தராஜ், குணசேகரனும் படுகாயமடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் லேசான காயம் அடைந்தார்.
பரிதாப சாவு
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவிந்தராஜ் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். குணசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.