கம்பைநல்லூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு
கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் இறந்தார்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள ஜக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் ஆண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் இதே ஊரைச் சேர்ந்த வேடியப்பன் என்பவருடன் கம்பைநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கோணைகுட்டை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாரத், வேடிப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் ேலசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பாரத் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. வேடியப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.