சேலத்தில் அரசு பஸ் சக்கரம் ஏறியதில்தலைநசுங்கி பட்டதாரி வாலிபர் சாவு
சேலத்தில் அரசு பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்
சேலத்தில் அரசு பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பட்டதாரி வாலிபர்
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 30). பட்டதாரி. இவர் சேலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் 3 ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே சாலையில் விழுந்தார். அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலை நசுங்கிய அவர் துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்த விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை பகுதியை சேர்ந்த இளையராஜா (47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.