மின்சாரம் தாக்கி பெண் சாவு
மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் இங்குள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி (வயது 55). இவர் நேற்று அஞ்சுகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் விதை நடும் பணிக்கு சென்றுள்ளார். ஊராட்சி அலுவலக வளாகத்தில் இவரும் வேறு சில பெண்களும் விதை நட்டு கொண்டு இருந்தனராம். அப்போது எந்திரம் விதை நடுவதற்கு மண் அள்ளிச் சென்று கொட்டி உள்ளது. அப்போது மேலே இருந்த மின்கம்பியில் எந்திரம் மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்தது அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்துக் ஓடி உள்ளனர். இதில் அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த தமிழரசி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் தமிழரசியின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் சிதம்பரம் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.