மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருத்துவ உதவியாளர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருத்துவ உதவியாளர் சாவு
x

கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மருத்துவ உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

கந்தம்பாளையம்

நாமக்கல் மாவட்டம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன் (வயது 57). இவர் பரமத்தியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதேபோல் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலல கண் மருத்துவ உதவியாளராக உதயகுமார் (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கரூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று கடந்த 24-ந் தேதி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மணிவண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் உதயகுமார் உட்கார்ந்து இருந்தார். இந்தநிலையில் கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் உதயகுமாருக்கு தலையில் பலத்த அடி பட்டது. மணிவண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்தவழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக உதயகுமாரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story