வாகனம் மோதி விவசாயி சாவு


வாகனம் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T15:54:45+05:30)

வாகனம் மோதி விவசாயி இறந்தார்

சிவகங்கை

திருப்புவனம்

திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது அண்ணன் மகன் காதணி விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் மாரநாடுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் வில்லியாரேந்தல் விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மணிகண்டனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story