டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு


டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்

சிவகங்கை

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் சரகம் பசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராசு, ரேணுகாதேவி உள்பட 10 பேர் காரில் இளையான்குடி அருகே உள்ள பகைவரைவென்றான் கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றனர். காரை மதுரையை சேர்ந்த பூவேல் என்பவர் ஓட்டினார்.

அந்த விழா முடிந்ததும் அவர்கள் அதே காரில் பசியாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பாச்சேத்தி அருகே தூதை விலக்கு பகுதியில் வந்த போது காரின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (65) என்பவர் மீது கார் மோதியதோடு ரோட்டை விட்டு விலகி அருகில் உள்ள முள்புதரில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் பூவேல், ராசு, ரேணுகாதேவி, சுப்பிரமணியன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். மற்ற 10 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று பசியாபுரத்தைச் சேர்ந்த ராசு (46) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story