ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் விபத்தில் பரிதாப சாவு


ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் விபத்தில் பரிதாப சாவு
x

அரூர் அருகே மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் இறந்தார்.

தர்மபுரி

அரூர்

சத்துணவு அமைப்பாளர்

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த வெட்டு காக்கிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கரியம்மாள். இவர் குடியரசு கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவருடைய இளைய மகன் மணி (வயது 55). இவர் அக்ராபுரம் விளாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து சர்க்கரை ஆலை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமியாபுரம் காவாபுதூரை சேர்ந்த கஜவேலு என்பவர் ஸ்கூட்டரில் கோபிநாதம்பட்டி கூட் ரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

விசாரணை

அந்த சமயம் பறையபட்டி மேம்பாலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மணி மீது பின்னால் கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டரின் டயர்கள் ஏறி இறங்கின. இதில் பலத்த காயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். கஜவேலு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


Related Tags :
Next Story