தீக்காயம் அடைந்த வாலிபர் சாவு


தீக்காயம் அடைந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீக்காயம் அடைந்த வாலிபர் இறந்தார்

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி கழனிவாசல் அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சபரி ராஜன் (வயது 26). இவர் கேட்டரிங் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் டியூப்பை திறந்துவிட்டு தீப்பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் இவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் சபரிராஜனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடலில் பலத்த தீக்காயம் அடைந்த சபரிராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story