லாரி மோதி வாலிபர் சாவு
லாரி மோதி வாலிபர் இறந்தார்
திருப்புவனம்
பூவந்தி போலீஸ் சரகம், கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் தற்போது அருகே உள்ள திருமாஞ்சோலையில் உள்ள பங்களா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மகன் மதன்குமார் (வயது 25). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில் சம்பவத்தன்று மதன்குமார் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து திருமாஞ்சோலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மதன்குமாரின் தந்தை ஆண்டிச்சாமி பூவந்தி போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார், லாரி டிரைவர் முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.