கார் மோதி முதியவர் சாவு


கார் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 23 May 2023 11:00 AM IST (Updated: 23 May 2023 11:02 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் கூட்டு ரோடு அருகில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த கார் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story