மொபட் மோதி விவசாயி பலி


மொபட் மோதி விவசாயி பலி
x
திருப்பூர்


மூலனூர் சேஷியம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70) இவர் விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணிக்கு சொந்த வேலையாக வெள்ளகோவில் வந்துவிட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட் ஓட்டி வந்தவர் நிலை தடுமாறி குப்புசாமி மீது மோதினார். இதில் கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தனியார்ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்ைச பெற்ற பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story