கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 11:32 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). தொழிலாளி. இவர் சி.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பணியின் போது சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story