வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள்- கமல்ஹாசன்


வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள்- கமல்ஹாசன்
x
தினத்தந்தி 23 Sept 2023 8:45 PM IST (Updated: 23 Sept 2023 8:46 PM IST)
t-max-icont-min-icon

வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள் என நடிகர் கமல்ஹாசன் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நடந்து வரும் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது ஒரு மாணவி, "மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும், சிறு வயதினர் இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றனர். தற்கொலைகளை தடுப்பதற்கான உங்களது அறிவுரைகள் என்ன" என்று கேட்டார். அதற்கு கமல்ஹாசன் கூறுகையில்,

"நானும் தற்கொலை குறித்து 20, 21 வயதில் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் தன்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒருபோதும் அவசரப்படக்கூடாது.

இருள் எப்போதும் உங்களுடனே இருக்கும் என்று கூறிவிட முடியாது. வெயில் வந்தே ஆகும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இரவு நேரத்தில் இருட்டு பயமாக உள்ளது என்றால், அதனை பிரகாசமாக்க கனவு காணுங்கள். நாளை நாம் என்ன செய்யக்கூடும் என்ற கனவை காணுங்கள்.

நினைத்துக்கொண்டே இருந்தால், ஒருவேளை நடக்கலாம். நடக்கவில்லை என்றால் பிளான் "பி" என்ன என்பதை யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள்" இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Next Story