5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உடலை புதைக்கும் குழியில் நிர்வாணமாக இறங்கி கணவன் செய்த செயல்...!


5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உடலை புதைக்கும் குழியில் நிர்வாணமாக இறங்கி கணவன் செய்த செயல்...!
x
தினத்தந்தி 24 Nov 2022 9:52 AM GMT (Updated: 2022-11-24T15:27:41+05:30)

மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் அடுத்துள்ளது சின்ன பசிலிகுட்டை என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பெயர் பூர்ணிமா.

கடந்த நான்கு வருடங்கள் முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. பூர்ணிமாவுக்கு 25 வயதாகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இப்போது 5 மாத கர்ப்பிணியாகவும் பூர்ணிமா இருந்துள்ளார்.

இந்த நிலையில்,சம்பவத்தன்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையை பூர்ணிமா வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கருவியில் இருந்து மின்சாரம் தாக்கிவிட்டது. இதனால் அலறி கத்திய பூர்ணிமா தூக்கி எறியப்பட்டார். அந்த அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழந்துவிட்டார்.

பூர்ணிமா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும், பூர்ணிமாவின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில், அடக்கம் செய்ய ஏற்பாடானது. மயானத்தில், சடலத்தை புதைக்க குழி தோண்டப்பட்டது. அந்த நேரம் பார்த்து, பூர்ணிமாவின் கணவர் ராஜதேசிங்கு, திடீரென குழி முழுவதும் உப்பை எடுத்து கொட்டினார். பிறகு, அந்த குழியில் திடீரென நிர்வாணமாக குதித்தார். உடனே அந்த குழியிலேயே பூஜையும் செய்ய தொடங்கினார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பயந்து போய்விட்டனர். இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறும் போது, சில வருஷங்களுக்கு முன்பு, இந்த ராஜதேசிங்கு சாமியார் போல் மாறினாராம். அப்போது தன்னை ஒரு சிவபக்தர் என்று சொல்லி வந்தாராம். அதனால்தான், மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார். இதை பார்த்து பலர் பயந்துவிட்டனர் என்று சொல்கிறார்கள்.


Next Story