லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு - வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்


லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு - வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
x

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது26). இவரது அக்காள் மகன் புகழ் அரசு (12). அஜய் காஞ்சீபுரம் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சுங்குவார்சத்திரம்- வாலாஜாபாத்

நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவருடன் புகழ் அரசுவும் மோட்டார் சைக்கிளில் சென்றான்.

குன்னம் அருகே சென்ற போது எதிர் திசையில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அஜய் மற்றும் புகழ் அரசு இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அதே லாரியின் சக்கரத்தில் புகழ் அரசு சிக்கி கொண்டான். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தவேலூர் பகுதியில் உள்ள அவசர சிகிச்சைமையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் புகழ் அரசு பரிதாபமாக இறந்தான்.

இதனிடையே வளைவான சாலையில் வேகத்தடை இல்லாததால் அசுர வேகத்தில் இயக்கப்படும் கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்து நேரிடுவதாக குற்றம் சாட்டி வேகத்தடை அமைக்க வலியுறுத்தி 100-கும் மேற்பட்ட அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நட த்தி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக சுங்குவார்சத்திரம்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமைறைவான லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

1 More update

Next Story