ஆயுள்தண்டனை கைதி சாவு
கோவை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி திடீரென உயிரிழந்தார்.
கோயம்புத்தூர்
கோவை
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு போக்சோ வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கடந்த 9-ந் தேதி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story