பிரகாஷ் சிங் பாதல் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95), சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"மூத்த தலைவரும் ஐந்து முறை பஞ்சாப் முதல்-மந்திரியாகவும் இருந்த திருவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பிரகாஷ் சிங் பாதல். இந்திய அரசியல் மற்றும் பஞ்சாபின் நலனுக்காக அவர் ஆற்றிய செழுமையான பங்களிப்புகள் எப்போதும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.