மாணவி ஸ்ரீமதி மரணம்: "அண்ணாமலை மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன?" - கே.எஸ்.அழகிரி கேள்வி
மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன என தமிழ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவண்ணாமலை,
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது,
ஏன் கனியாமூர் பள்ளி குழந்தையின் மரணத்திற்கு மட்டும் அவர்கள் கருத்து செல்லவில்லை. அல்லது கண்டம் தெரிவிக்கவில்லை. முறையான நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன. எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எதற்காக ஆர்.எஸ். எஸ் மவுனமாக இருக்கிறார்கள். என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story