பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2023 12:30 AM IST (Updated: 27 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் போலீசார் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோர் நேற்று முன்தினம் வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது 34) திடீரென்று பெண் போலீசாரை வழிமறித்து தங்கள் பகுதிக்கு ரோந்து வரக்கூடாது என்றும், மீறி வந்தால் கல்லால் தாக்கி கொலை செய்வேன் என்றும் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்மேனன் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தார்.



Next Story