வக்கீலுக்கு கொலை மிரட்டல்
வக்கீலுக்கு கொலை மிரட்டல்
கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மணிநகரை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (வயது 45). இவரது தந்தை முகமது யூசப்புக்கு சொந்தமான இடத்தில் அக்பர் அலி (36) என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்்த நிலையில் கடையை காலி செய்வது தொடர்பாக அப்துல் ரஜாக்குக்கும், அக்பர் அலிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று பேக்கரிக்கு சென்ற அப்துல் ரஜாக்கை, அக்பலி அலி மற்றும் ஊழியர்கள் அக்கீம், ரவி ஆகியோர் தாக்கி, கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதேபோல அப்துல் ரஜாக் தனது நண்பர் பாபு என்ற சண்முகத்துடன் சேர்ந்து பேக்கரியை காலி செய்யக்கூறி அக்பர் அலி மற்றும் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story