வாலிபருக்கு கொலை மிரட்டல்


வாலிபருக்கு கொலை மிரட்டல்
x

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பத்மநாதன் (55), லீலா மகன் சந்தோஷ் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பார்த்திபன் வீட்டு முன்பு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பார்த்திபன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்.


Next Story