கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை(வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த முனியன் மகன் ஏழுமலை மற்றும் ராமலிங்கம் மகன் முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த நாவப்பிளையை அவர்கள் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story