அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்


அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரிக்கு அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே

அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

டிரைவர் உள்பட 3 பேர் கைது

சின்னசேலம், ஜூலை.4-

சின்னசேலம் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரிக்கு அனுமதி சான்று கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

சின்னசேலத்தை அடுத்த மரவாநத்தம் ஏாியில் இருந்து கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன்(வயது 54) தனது அலுவலக உதவியாளர்களுடன் பாண்டியன்குப்பம் சாலை வழியாக ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது லாரி டிரைவர் கள்ளக்குறிச்சியை அடுத்த தென் கீரனூரை சேர்ந்த காளிமுத்து மகன் வரதன்(43) என்பவரிடம் கிராவல் மண் ஏற்றி செல்வதற்கான அனுமதி சான்றை கேட்டார். இதையடுத்து டிரைவர் உடனே லாரி உரிமையாளர் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருக்கு போன் செய்து வரவழைத்தார். பின்னர் இவர் சாலை விரிவாக்க பணிக்கு மண் ஏற்றி செல்வதாக தெரிவித்தார். அதற்கான அனுமதி சான்றை கிராம நிர்வாக அலுவலர் கேட்டபோது எடுத்து வருவதாக கூறி விட்டு வெங்கடேசன் அங்கிருந்து சென்று விட்டார்.

கொலை மிரட்டல்

பின்னர் விசாரணையில் நிலத்துக்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்றுக்கொண்டு திருட்டுத்தனமாக கிராவல் மண்ணை ஏற்றி இதர பணிகளுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அங்கு வந்த லாரி உரிமையாளரின் ஆதரவாளர்கள் சின்னசேலத்தை அடுத்த ஊனாம்புதைக்காடு பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் சூரியபிரகாஷ்(27), வானக்கொட்டாய் ராமசாமி மகன் சதீஷ்குமார்(45), பூசப்பாடி கிராமம் ராமசாமி மகன் ராமர்(58) ஆகிய 3 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாக திட்டியதோடு லாரியை மறித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

3 பேர் கைது

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் வெங்கேடசன், அவரது ஆதரவாளர்கள் சூரியபிரகாஷ், சதீஷ்குமார், ராமர், லாரி டிரைவர் வரதன் ஆகிய 5 பேர் மீது சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், சதீஷ்குமார், வரதன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசன் உள்பட இருவரையும் தேடி வருகிறார்கள்.


Next Story